எடப்பாடியாரின் தலையிலேயே கைவைத்த பிரேமலதா… தம்பிக்காக வெறித்தனம்..!

 

எடப்பாடியாரின் தலையிலேயே கைவைத்த பிரேமலதா… தம்பிக்காக வெறித்தனம்..!

ஒருவேளை சென்னை மேயர் சீட் கிடைத்தால் பிரேமலதாவின் தம்பி சுதீஷை நிறுத்தலாம் என கணக்குப்போட்டுள்ளனர். இது பிரேமலதாவின் ஆசையாம்.

நாங்குநேரியில் அதிமுக வெல்ல பாஜகவும், விக்கிரவாண்டியில் வெல்ல பாமக தான் காரணம் என இரு கட்சிகளும் வெற்றியை பங்குபோட, தேமுதிகவோ, நாங்குநேரி, விக்கிரவாண்டி இருதொகுதிகளிலும் அதிமுக வெல்ல தாங்கள் தான் காரணம் என தம்ப்பட்டம் அடித்து வருகிறது. 

மக்களவை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க நிர்வாகிகள் ஒட்டாமல் ஒதுங்கியே நின்றனர். அடுத்து வேலுார் எம்.பி தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தலைமையுடன் தே.மு.தி.க., தரப்பு மறுபடியும் நெருக்கமாகி விட்டது. விக்கிரவாண்டி, நாங்குநேரியில்  அ.தி.மு.க வெற்றி பெற விஜயகாந்த் செய்த பிரச்சாரம் முக்கிய காரணம் என  தே.மு.தி.க.,வினர் பேச ஆரம்பித்துள்ளனர்.

vijayakanth

இதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வரும்  உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு, சென்னை அல்லது சேலம் மேயர் சீட்டை கேட்டு வாங்க முடிவு செய்திருக்கிறார்கள். ஒருவேளை சென்னை மேயர் சீட் கிடைத்தால் பிரேமலதாவின் தம்பி சுதீஷை நிறுத்தலாம் என கணக்குப்போட்டுள்ளனர். இது பிரேமலதாவின் ஆசையாம். 

ஆனால், சேலம் முதல்வர் எடப்பாடியின் சொந்த ஊர் என்பதால் விட்டுக் கொடுக்க மாட்டார். தேமுதிகவில் இந்த கோரிக்கை வரம் கொடுத்த முனிவரின் தலையிலேயே கை வைப்பதைப்போல் உள்ளது என அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கொதிக்கிறார்கள்.