எடப்பாடிக்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்! – இதுதான் மக்கள் பணியா என்று கனிமொழி எம்.பி கேள்வி

 

எடப்பாடிக்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்! – இதுதான் மக்கள் பணியா என்று கனிமொழி எம்.பி கேள்வி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகம் செல்லும்போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுவாக கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் முதல்வர் செல்லும்போது போக்குவரத்து நிறுத்தப்படும்.

எடப்பாடி பழனிசாமி செல்வதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக சென்னை போலீஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுதான் மக்கள் பணியா என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகம் செல்லும்போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுவாக கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் முதல்வர் செல்லும்போது போக்குவரத்து நிறுத்தப்படும். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் முதல்வருக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

edapaadi-palanisamy

ஊரடங்கு காலத்தில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மருத்துவம், காவல், ஊடகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியே வருபவர்களை அதிலும் ஆம்புலன்ஸ் வாகனத்தை முதல்வர் பழனிசாமிக்காக தடுத்து நிறுத்துவது நியாயமா என்ற கேள்வியை அந்த ஊடகம் எழுப்பிவருகிறது.
இந்த செய்தியை தி.மு.க எம்.பி கனிமொழி ரீட்வீட் செய்துள்ளார். அதனுடன் “முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி” என்று கமெண்ட் செய்துள்ளார்.