எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா

 

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது

விருதுநகர்: எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்றுடைய ரத்தம் ஏற்றப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பெண்ணின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சாத்தூர் டவுன் காவல் நிலையம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 3-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை மற்றும் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க 5 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் சாத்தூர் அருகே வாடகை வீட்டில் குடியிருந்து வருவதால், அவருக்கு அப்பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா, முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான பணி உத்தரவையும் அவருக்கு ஆட்சியர் சிவஞானம் வழங்கினார்.