எச்.ஐ.வி பாதித்த தம்பதி : பச்சிளம் குழந்தையை விற்ற சோகம்..!

 

எச்.ஐ.வி பாதித்த தம்பதி : பச்சிளம் குழந்தையை விற்ற சோகம்..!

எச்.ஐ.வியால் வேலைக்குச் செல்ல முடியாத கணவன் மனைவி இருவரும் குடும்பத்தை நடத்தப் பண ரீதியாகச் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஒரு தம்பதி எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏதும் இல்லையாம். எச்.ஐ.வியால் வேலைக்குச் செல்ல முடியாத கணவன் மனைவி இருவரும் குடும்பத்தை நடத்தப் பண ரீதியாகச் சிரமப்பட்டு வந்துள்ளனர். ஏற்கனவே, இருக்கும் இரண்டு குழந்தைகளையே வளர்க்கச் சிரமப் பட்டு வந்த இவர்களுக்குக்  கடந்த 25 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

HIV

இவர்களின் குடும்ப வறுமையை இவர் பிரசவம் பார்த்த செவிலியரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த செவிலியர் குழந்தையை விற்று விடுங்கள் என்று கூறியுள்ளார். அதன் படி, அந்த செவிலியர் மூலமாகவே அந்த குழந்தையை, சில ஆண்டுகளுக்கு முன் தன் மகனை இழந்து தவித்துக் கொண்டிருந்த ஒரு முதிய தம்பதியினருக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலம் சரியாமல் போனதால், அந்த முதிய தம்பதியினர் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். 

Baby

அதில், அந்த குழந்தைக்கு இருதய நோய் இருப்பதால் உடனடியாக தாய்ப்பால் வழங்கும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அந்த முதிய தம்பதியினர் மறுப்பு தெரிவித்ததால் மருத்துவர்களுக்குச் சந்தேகம் வந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

Elders

அதன் பின், அந்த முதிய தம்பதியினரிடம் நடத்திய விசாரணையில் அது அவர்களின் குழந்தை இல்லை என்றும் வேறு ஒருவரிடம் இருந்து இந்த ஆண் குழந்தையை வாங்கிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர். அதன் பின், அந்த குழந்தையின் பெற்றோர்களை காவல்துறையினர் விசாரித்ததில் , எச்.ஐ.வி பாதித்ததால் குடும்ப வறுமையின் காரணமாகக் குழந்தையை ஒரு செவிலியர் மூலம் விற்றோம் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.