எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!

 

எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1,323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய வகை வைரஸை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், கொரோனா இதுவரை கட்டுக்குள் வரவில்லை. 

ttn

கண்ணுக்கே தெரியாத அந்த வைரஸ் நம்மை தாக்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ள சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு  வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், பரவுதல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதவாது பொது இடங்களில் எச்சில் துப்பினால் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் என தெரிவித்துள்ளார்.