எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்! இந்த ராசிக்காரர்களே உஷார்!!

 

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்! இந்த ராசிக்காரர்களே உஷார்!!

புரட்டாசி  24  (11.10.19)
வெள்ளி கிழமை

நல்ல நேரம் ~காலை 6.30 மணி முதல் 7.30 am & மாலை 5.05 ~5.30 மணி வரை
ராகு காலம் ~காலை 10.30 மணி முதல்~ மதியம் 12 மணிவரை
எமகண்டம் ~ மாலை 3.00 மணி முதல் ~4.30 மணி வரை 
குளிகை ~ காலை 7.30 மணி முதல் ~9.00 மணி வர 
சந்திராஷ்டமம் ~கடகம்  
இன்று ~பிரதோஷம்

மேஷம்

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். ஆபீசில் உங்கள் டீமில் அதிகம் வெறுப்பேற்றும் நபர் இன்று மிக இணக்கமாக உங்களிடம் நடந்து கொள்வார். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 

கிரியேட்டிவான வேலை உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். விருந்தினர்கள் வருகையால் ஆனந்தமடையும் அற்புதமான நாள். உறவினர்களுக்காக ஸ்பெஷலாக திட்டமிடுங்கள். அவர்கள் அதைப் பாராட்டுவார்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் 

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் அதை செலவிட வேண்டும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். உங்கள் மனதிற்கு இனியவரை காணலாம் என்பதால், உங்களை வாட்டி வந்த தனிமைக்கு முடிவு ஏற்படலாம். புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் 

உங்களை பலிகடாவாக ஆக்க சிலர் முயற்சிப்பார்கள் என்பதால் கவனமாக இருங்கள். அழுத்தமும் டென்சனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும் – ஆனால் சிறிய விஷயங்களுக்காக துணைவரை குறைசொல்வதைத் தவிர்த்திடுங்கள். அபீசில் உங்களது போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை இன்று அனுபவிப்பார்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் 

இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. காதல் – துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். சிலருக்கு நிச்சயமாக புதிய ரொமான்ஸ் கிடைக்கும் – உங்கள் வாழ்வில் காதல் பூக்கும். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி 

அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப்பார். டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களில் சிலர் உங்களை நெருக்கமாக கவனித்து உங்களையே ரோல் மாடலாகவும் கருதுகிறார். உங்கள் நற்பெயரை அதிகரிக்கும் வகையில் பாராட்டத்தக்க செயல்களை மட்டுமே செய்யுங்கள். கருத்து வேறுபாடுகளால் தனிப்பட்ட உறவு உடையலாம். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளை கற்றுக் கொள்ள உதவும் வகையில் குறுகிய கால புரோகிராம்களில் சேர்ந்து கொள்ளுங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

துலாம்

ஒரு நண்பரின் ஜோதிட வழிகாட்டுதல் உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் செய்ய ஊக்கம் தருவதாக இருக்கும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். காதலருடன் வெளியில் செல்லும் திட்டம் ரத்தாகும் என்பதால் ஏமாற்றம் ஏற்படும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. துணைவர் அக்கறையாக இருப்பார் நியாயமான தாராளமான அன்புக்குப் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களை வெளிப்படுத்திக் கொண்டு – கிரியேட்டிவ் இயல்புள்ள வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு 

தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். புதியவற்றின் மீது கவனம் செலுத்தி உங்களின் சிறந்த நண்பர்களின் உதவியை நாடுங்கள். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. எந்த புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் கையெழுத்திடாமல் தள்ளியிருங்கள். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். இன்று உங்கள் உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி அற்புதமான காதல் மூடில் இருப்பார்.

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 

வேலையில் அழுத்தமும் வீட்டில் இணக்கமின்மையும் சிறிது அழுத்தத்தை உருவாக்கலாம். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் குடும்பத்துக்காக சில மதிப்புமிக்க உருப்படியான விஷயங்களுக்காக ரிஸ்க் எடுக்கலாம். பயப்பட வேண்டாம். ஏனென்றால் வாய்ப்பைத் தவறவிட்டால் திரும்ப வராது. இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள் – அதில் இருந்து மதிப்பு மிக்க யோசனை கிடைக்கலாம். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 

அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். பிசினஸ் நிமித்தம் மேற்கொண்ட திடீர் பயணத்துக்கு பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் 

உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். குடும்ப பிரச்சினைக்கு உயர் முன்னுரிமை தர வேண்டும். தாமதமின்றி அதை விவாதிக்க வேண்டும். ஏனெனில் இதை தீர்த்துவிட்டால், மற்றவை எளிதாகிவிடும். அதன்பிறகு குடும்பத்தினரிடம் ஆதிக்கம் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் வராது. இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் – பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5⃣