எங்களை காப்பது இந்தியாவின் கடமை, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு அழைப்பு!

 

எங்களை காப்பது இந்தியாவின் கடமை, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு அழைப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உலக மனித உரிமை மாநாடு நடந்துகொண்டு இருக்கிறது. அதில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அந்தப்பக்கம் இருந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது ஒரு குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் செர்ஜி ஹெச் செரிங்

un-human-rights-geneva

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் இஸ்மாயில், மற்றும் ஷியா இன இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்த்தான் படைகளும், உள்ளூர் தீவிரவாதிகளும் இழைக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வரும் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் செர்ஜி செரிங். ஜெனிவா மாநாட்டில் உரையாற்றிய அவர், 70 ஆண்டுகளுக்கு முன்னால் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட இந்தியப் படைகளை நிறுத்தச் சொன்னது ஐநா சபை.

un-geneva

இப்போது நாங்கள் தீவிரவாதிகளாலும் அரசு படைகளாலும், மிரட்டல், சிறை, கடத்தல் என பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களைக் காக்க வேண்டிய அரசியலமைப்புச் சட்ட கடமை இந்தியாவிற்கு இருக்கிறது. அதனால்,இந்தியா இங்கே வந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நான் அழைக்கிறேன் என்று பேசி இருக்கிறார். இது இந்தியா பாகிஸ்தான், இரு தரப்பிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.