எங்களுக்கு எம்.எல்.ஏ பதவி வேண்டாம் என்று கூறிவிட்டு எம்.பி ஆனது ஏன்? – ஜி.கே.வாசனை நெருக்கும் தலைவர்கள்

 

எங்களுக்கு எம்.எல்.ஏ பதவி வேண்டாம் என்று கூறிவிட்டு எம்.பி ஆனது ஏன்? – ஜி.கே.வாசனை நெருக்கும் தலைவர்கள்

ஒரு காலத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சியாக விளங்கியது தமிழ் மாநில காங்கிரஸ். தமிழகத்தின் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தோடு, அதிக எம்.பி-க்கள் கொண்ட கட்சியாக அது வலம் வந்தது. மூப்பனார் மறைவுக்குப் பிறகும் கூட மிகவும் கௌரவமாகவே இருந்தது.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றபோது அ.தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறிய வாசன், தற்போது அ.தி.மு.க உறுப்பினராக நாடாளுமன்றம் செல்வது சரியா என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கேள்வி எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் தமிழகத்தின் முக்கிய கட்சியாக விளங்கியது தமிழ் மாநில காங்கிரஸ். தமிழகத்தின் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தோடு, அதிக எம்.பி-க்கள் கொண்ட கட்சியாக அது வலம் வந்தது. மூப்பனார் மறைவுக்குப் பிறகும் கூட மிகவும் கௌரவமாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்த பிறகு ஜி.கே.வாசன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனார். அதன் பிறகு தனி பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் என்று மிக முக்கிய துறைகளில் அவரை அமரவைத்து அழகு பார்த்தது காங்கிரஸ்.

vasan

பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் தன்னுடைய தந்தைக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறினார் ஜி.கே.வாசன். இதற்கு மத்திய பா.ஜ.க அரசு கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. கட்சியை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் சி.பி.ஐ ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு வரும் என்று மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட ஜி.கே.வாசன் முயன்றார். ஐந்து தொகுதிகள் தருவதாகவும் ஆனால் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியதால் மூன்றாவது அணிக்கு சென்றார் ஜி.கே.வாசன். அப்போது, எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக கட்சியின் மூத்த தலைவர்கள் வருத்தப்பட்டனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு த.மா.க வேட்பாளர் தோல்வியே தழுவினார். கட்சியில் தொண்டர்கள், தலைவர்களே இல்லாத நிலையில் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கியது அ.தி.மு.க. டெல்லியில் பா.ஜ.க மூலமாக அழுத்தம் கொடுத்து சீட் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி தர்மம் காரணமாகவே அ.தி.மு.க வழங்கியது என்று விளக்கம் அளித்தார் ஜி.கே.வாசன்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஐந்து பேர் எம்.எல்.ஏ-க்களாக ஆகியிருப்போம். ஆனால் கூட்டணியே வேண்டாம் என்று கூறி ஐந்து பேரின் அரசியல் வாழ்வை அழித்த ஜி.கே.வாசன், தான் எம்.பி ஆக வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க உறுப்பினராக சென்றது ஏன் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மூத்த தலைவர்களின் இந்த கேள்வியால் ஜி.கே.வாசன் தர்மசங்கடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.