ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிபுரியலாம் – ட்விட்டர் நிர்வாகம் அறிவிப்பு

 

ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிபுரியலாம் – ட்விட்டர் நிர்வாகம் அறிவிப்பு

ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிர்வாகம் நேற்று பேசுகையில் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் தனது அலுவலகங்களைத் திறக்க வாய்ப்பில்லை என்றும், அதன் ஊழியர்கள் பலர் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பிறகும் வீட்டிலிருந்து நிரந்தரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியது.

twitter

கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் தங்களால் வீட்டிலிருந்தே வேலையை சிறப்பாக செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள். ஆகவே, எங்கள் ஊழியர்கள் சூழ்நிலை இருந்தால், அவர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால் நாங்கள் அதை அனுமதிப்போம்.” என்று ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

மிகக் குறைந்த விதிவிலக்குகளுடன், அலுவலகங்கள் செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ட்விட்டர் அலுவலகங்கள் திறக்கப்படாது. நாங்கள் அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்யும் போது, ​​அது முன்பு இருந்ததைப் போலவே திரும்பவும் இருக்காது” என்று கூறப்பட்டுள்ளது. கூகிள் மற்றும் பேஸ்புக்கின் அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டரின் இந்த செய்தி வந்துள்ளது.