“ஊழல், பதவி, முறைகேடு” : ஆளும் அதிமுக; ஆண்ட திமுகவை வெளுத்து வாங்கிய ரஜினி

 

“ஊழல், பதவி, முறைகேடு” : ஆளும் அதிமுக; ஆண்ட திமுகவை வெளுத்து வாங்கிய ரஜினி

அவை 50 ஆயிரம் பதவிகள் வைத்துள்ளன. தேர்தலுக்கு முன் உழைப்பார்கள். தேர்தலுக்கு பின்  மக்களை  மறந்துவிடுகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறினேன். அது இல்லாமல் நான் அரசியல் இறங்கினால் அது தவறு. அதற்காக சில திட்டங்களை வைத்துள்ளேன். அதில் முதல் திட்டத்தை இப்போது சொல்கிறேன். தமிழகத்தில் பெரிய காட்சிகள் என்றால் அது திமுக, அதிமுக தான். அவை 50 ஆயிரம் பதவிகள் வைத்துள்ளன. தேர்தலுக்கு முன் உழைப்பார்கள். தேர்தலுக்கு பின்  மக்களை  மறந்துவிடுகின்றனர்.

 

அரசியல் பதவிகளை சிலர் தொழிலாக வைத்துள்ளனர். டெண்டர் முதல் பல்வேறு விஷயங்களில் முறைகேடு செய்கின்றனர். அதை நம் ஆட்சியில் செய்ய கூடாது. 50 வயதுக்கு மேற்பட்டோர் தான் எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். அதனால் நம் ஆட்சி வைத்தால்  இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன்’ என்று  ஆளும் அதிமுக மற்றும் ஆண்ட  திமுகவை குறிவைத்து தாக்கி பேசினார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் நீதிபதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவர்களை வீட்டிற்கு சென்று அழைப்பேன்  எண்டு கட்சியில் சேர்ப்பேன். அதன்பின் ஆட்சி அமைப்பேன். அதற்கு நான் ஒரு பாலமாக இருப்பேன். கட்சி தலைமை வேறு ஆட்சித் தலைமை வேறு என இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆட்சி சிறப்பானதாக இருக்கும்’ என்றார்.