ஊழல் செய்து சேர்த்த பணத்தை மக்களுக்குத் தரலாமே! – தி.மு.க-வை சீண்டிய பா.ஜ.க

ஊழல் செய்து சேர்த்த பணத்தை மக்களுக்குத் தரலாமே! – தி.மு.க-வை சீண்டிய பா.ஜ.க

கொரோனா பாதிப்புக்காக மக்களுக்கு உதவி செய்யும்படி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசுகளின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருப்பதால் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதும் இதனால் வழியிலேயே பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும்படி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மக்கள் அரசுக்கு உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளனர். 

கொரொனா தடுப்பு மற்றும் நிவாரண உதவிக்காக தி.மு.க ஒரு கோடி ரூபாய் வழங்குவதைத் தமிழக பா.ஜ.க கடுமையாக விமர்சித்திருக்கிறது.
கொரோனா பாதிப்புக்காக மக்களுக்கு உதவி செய்யும்படி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசுகளின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருப்பதால் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதும் இதனால் வழியிலேயே பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும்படி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மக்கள் அரசுக்கு உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளனர். 

mk-stalin-78

தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பி-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க, மருத்துவ வசதிகளை மேம்படுத்த உதவி செய்து வருகின்றனர். ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை உதவி செய்துள்ளனர். தி.மு.க சார்பில் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
பாரதிய ஜனதா கட்சியோ உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியை பிரதமர் புதிதாக உருவாக்கிய நிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தமிழக பா.ஜ.க கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், “தொகுதி வளர்ச்சி நிதியை சொந்த காசாக காட்டிய அறிவாலயம். இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும்  ஸ்டாலின்.சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்க தான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்த போது, ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாரளமாக கொடுக்கலாமே” என்று கூறியுள்ளது.