ஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா! அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க!

 

ஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா! அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க!

சென்னை அடையாறு ரொம்பவே செழிப்பான பகுதி.அந்த அடையாற்றில் இருக்கும் எல்.பி ரோட்டு ,எண் 10 என்கிற முகவரியில் இருக்கிறது, குரு மெஸ் என்கிற இந்த வித்தியாசமான உணவகம்.விதவிதமான புதுப்புது ஐட்டங்களுடன் பாரம்பரிய சுவைகளையும் சேர்த்து பரிமாறுகிறார்கள் இங்கே.உதாரணமாக கல்கட்டை தோசை என்று மீன் வடிவத்தில் ஒரு ஐட்டம் தருகிறார்கள்.

சென்னை அடையாறு ரொம்பவே செழிப்பான பகுதி.அந்த அடையாற்றில் இருக்கும் எல்.பி ரோட்டு ,எண் 10 என்கிற முகவரியில் இருக்கிறது, குரு மெஸ் என்கிற இந்த வித்தியாசமான உணவகம்.விதவிதமான புதுப்புது ஐட்டங்களுடன் பாரம்பரிய சுவைகளையும் சேர்த்து பரிமாறுகிறார்கள் இங்கே.உதாரணமாக கல்கட்டை தோசை என்று மீன் வடிவத்தில் ஒரு ஐட்டம் தருகிறார்கள். வஞ்சிரம் மீன்,முட்டை, தோசை மாவு எல்லாம் சேர்த்து கல்லில் ஊற்றி எடுத்து மீன் ஷேப்பிலேயே தருகிறார்கள். தொட்டிக்கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.மலேசியா நூடுல்ஸ் என்கிற டிஷ்ஷும் சிறப்பாக இருக்கிறது, இதில் மாதுளை முத்துக்கள், பொடியாக வெட்டிய ஆப்பிள் தூவி இருக்கிறார்கள். இறால் கல் ரைஸ் என்று ஒரு புதிய ஐட்டம் இருக்கிறது. அதில், நிறைய இறாலும், அத்துடன் இரண்டறக் கலந்த அரிசி சோற்றுடன் பரிமாறப்படுகிறது.

guru-mess-01

வேறு எங்கும் கேள்விப்பட்டே இராத செட்டிநாடு வீட்டு சிக்கன் குழம்பு , மிக, மிக திக்கான அயிரை மீன் குழம்பும் அவசியம் சுவைக்க வேண்டிய பண்டங்கள். உப்புக்கண்ட வறுவலும் உண்டு.அடுத்த புதுமை வாழையிலை புரோட்டா,இது சென்னை வாசிகள் அறியாத ஒரு சுவை,சூடான புரோட்டாவைப் பிய்த்து ஒரு வாழை இலையில் போட்டு,அத்துடன் கொதிக்கும் கோழி குருமாவை ஊற்றி,அந்த வாழை இலையை மடக்கிப் பொட்டலாமாகக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

dosaaa

நீங்கள் அதை வாங்கித் தட்டில் வைத்துப் பிரிக்கும்போது, கோழிக் குருமாவில் ஊறிய புரோட்டாவின் மணமும்,சுவையும் உங்களை கிறங்கட்டித்து விடும்.கடைடிசுயாக,ஊறவச்ச சோற்ற்றுக்கு வருவோம்.சிறிய மண் குடுவையில் சோற்றைப் போட்டு அத்துடன் சின்னவெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு ஊறவைத்த சோற்துடன், சுரீர்கார கருவாட்டுத் தொக்கும் தருகிறார்கள். இதோடு எழுந்து விடாதீர்கள், குருமெஸ்ஸில் தரப்படும் கோக்கனெட் புடிங் நீங்கள் தவறவிடக்கூடாதது, நினைவிருக்கட்டும்.