ஊரே கொண்டாடிய ஆசிரியர்…ஒரே நாளில் தலைகுனிய நேர்ந்த சோகம்…!

ஊரே கொண்டாடிய ஆசிரியர்…ஒரே நாளில் தலைகுனிய நேர்ந்த சோகம்…!

கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளியான ஒரு வாட்ஸ்ஆப் வீடியோ வெளியானது.அதில் ஒரு இளம் ஆசிரியர் ஒரு பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார்.உடனிருந்த பள்ளி மாணவர்கள் கதறிய கதறலும்,சிந்திய கண்ணீரும் ஒரே நாளில் உலகம் முழுக்க வைரலானது.

bagavan

அந்த இளம் ஆசிரியர் பகவான்,திருவள்ளுவர் மாவட்டம் ‘வெளியகரம் ‘ அரசு பள்ளியின் ஆசிரியர்.பணியிட மாற்றம் செய்ததை ஒப்புக்கொள்ள மருத்துதான் அந்த மாணவர்கள் அப்படி அழுதார்கள்.கல்வித்துறையில் இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும்,சம்பந்தப்பட்ட பள்ளிகுழந்தைகளின் அன்புக்காக கல்வித்துறையும் பணியிட மாற்றத்தை தற்காலிகமாக அப்போது ரத்து செய்திருந்தது.

இது குறித்த செய்திகள் வராத மீடியாவே கிடையாது! பலரது பாராட்டுக்களும், அன்பும் என்று ஒரு முன் மாதிரி ஆசிரியராக இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டார்.இன்று அதே ஆசிரியர் மீது ஒரு பெண் ‘திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுத்திருப்பது பலரையும் அதிர வைத்திருக்கிறது!

bagavan

ஆசிரியர் பகவான் பணியாற்றி  வந்த  வெள்ளியகரத்தைச்  சேர்ந்தவர்  நாதமுனி.அவரது மகள்தான் இப்படியொரு பகீர் புகாரை எழுப்பி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறார்!

இந்த புகாரின் பேரில் ஆசிரியர் பகவானை அழைத்து விசாணை நடத்தியிருப்பது மட்டும் முதல் கட்ட தகவலாக வெளியாகியுள்ளது.