ஊரெல்லாம் ஒட்டுப்போடச் சொல்லி பிரசாரம் பண்ணின கிரிக்கெட் பிளேயருக்கு நேர்ந்த கொடுமை!

 

ஊரெல்லாம் ஒட்டுப்போடச் சொல்லி பிரசாரம் பண்ணின கிரிக்கெட் பிளேயருக்கு நேர்ந்த கொடுமை!

தேர்தலில் வாக்களிக்கும் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை பிரபலங்களை கொண்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது

பெங்களூரு: தேர்தல் ஆணைய தூதராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டினால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் வாக்களிக்கும் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை பிரபலங்களை கொண்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

dravid

அந்த வகையில், கர்நாடக தேர்தல் ஆணையத்தின் தூதராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், அவராலேயே வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இந்திரா நகர் எனும் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு வரை வசித்து வந்த ராகுல் டிராவிட், தற்போது, சாந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்திரா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்த அவர், சாந்தி நகரில் உள்ள ஆர்.எம்.வி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது.

dravid

இதையடுத்து, அவரது இல்லத்திற்கு இரண்டு முறை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுகுறித்து விசாரிக்க சென்றதகாவும், ஆனால், அவர் வெளிநாடு சென்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், அவரது வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டு போய்விட்டது.

தேர்தலில் வாக்களிக்க மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட பிரபலம் ஒருவருக்கே வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, தெலங்கானா மாநில மக்களவை தேர்தலின் போது, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா காமினேனியின் வாக்கு, ஹைதராபாத் வாக்குச்சாவடியில் நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

shobana

இதனால் ஆவேசமடைந்த அவர், எனது வாழ்நாளில் இந்திய குடிமகளாக இது மோசமான நாளாகும். நான் ஒட்டு போடுவதற்காக வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இந்திய குடிமகளாக எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது. என்னால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

சமாதானமா?சவாலா? சாய்ஸ் யுவர்ஸ்! : சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்