“ஊருக்கு கெடுதல் வரக்கூடாது சாமி” : கும்மாங்குத்து திருவிழாவில் 100 பேரில் மண்டை உடைந்தது!

 

“ஊருக்கு  கெடுதல் வரக்கூடாது சாமி” : கும்மாங்குத்து திருவிழாவில் 100 பேரில் மண்டை உடைந்தது!

இருப்பினும் சில நிமிடங்களில் நடத்தி கொள்கிறோம் என்று கூறி  20 நிமிடங்களே அரங்கேறிய கும்மாங்குத்துச் சண்டையில் 100 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

ஹோலி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் நிஜாமாபாத் மாவட்டம் ஹன்சா கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து  குத்துச் சண்டைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடுவில் நீண்ட கயிறு கட்டி பல சாதியினர் சேர்ந்து இரு பிரிவாக நின்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் இந்த விழாவில் 2 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்று அடிவாங்குவதோடு அடியும் கொடுக்கிறார்கள்.

ttn

பலரும் படுகாயம் அடையும் இந்த திருவிழாவுக்கு  இந்தாண்டு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் சில நிமிடங்களில் நடத்தி கொள்கிறோம் என்று கூறி  20 நிமிடங்களே அரங்கேறிய கும்மாங்குத்துச் சண்டையில் 100 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் இவர்கள் மருத்துவமனை செல்லாமல் 
ஆஞ்சநேயர் கோயில் அக்னிகுண்டத்து சாம்பலை எடுத்து காயங்களில் பூசி கொள்கிறார்.  ஊருக்கு எந்த கெடுதலும் இருக்க கூடாது என்று நடத்தப்படும் இந்த விழா மூடநம்பிக்கைக்கு அடித்தளமாக இருப்பதாகக்  கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.