ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பிரமுகர் !

 

ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பிரமுகர் !

உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பு வந்த உடனே, தலைவர் பதவியில் என்னை எதிர்த்து யாரும் போட்டிப் போடக்கூடாது.. அந்த பதவி எனக்குத் தான்.. அப்படிப் போட்டியிட்டால் அவர்களை அடிப்பேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தமாக சுமார் 1,800 ஓட்டுகள் உள்ளன. இந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் இருந்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பு வந்த உடனே, தலைவர் பதவியில் என்னை எதிர்த்து யாரும் போட்டிப் போடக்கூடாது.. அந்த பதவி எனக்குத் தான்.. அப்படிப் போட்டியிட்டால் அவர்களை அடிப்பேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அந்த ஊர் மக்கள் பதவியை ஏலம் விடுவதற்கு முடிவு எடுத்துள்ளனர். அதன் படி, நேற்று நடுக்குப்பம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ஏலம் நடைபெற்றுள்ளது. 

ttn

அதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சக்திவேல் ஊராட்சி தலைவர் பதவியை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். மேலும்,  தேமுதிகவைச் சேர்ந்த முருகன் என்பவர் துணைத் தலைவர் பதவியை  ரூ.15 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். இதனையடுத்து, வரும் 15 ஆம் தேதிக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். சக்திவேல் இந்த பதவியை ஏலம் எடுத்து விட்டதால் அவரை எதிர்த்து யாரும் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். ஜனநாயகம் முறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்காமல் ஏலத்தின் மூலம் அந்த ஊர்மக்கள், ஊர் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.