ஊரடங்கை மதிக்காமல் கிரிக்கெட் : ட்ரோன் கேமிராவை தாக்க முயன்ற இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

 

ஊரடங்கை மதிக்காமல் கிரிக்கெட் : ட்ரோன் கேமிராவை தாக்க முயன்ற இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ttt

இதனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில்  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

tt

அப்போது சீர்காழி மற்றும் எடமணல் ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் ஆடிய இளைஞர்கள் ட்ரோன் சத்தம் கேட்டு தலைதெறிக்க ஓடினர். வயல்வெளியில் கிரிக்கெட் ஆடிய சிலரோ ட்ரோன் கேமிராவை கல்லால் தாக்க முயன்றனர். இருப்பினும் ட்ரோன் அருகில் செல்ல செல்ல பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.  

tt

இதுபோன்ற செயல் தொடர்ந்தால் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர்களை போலீசார் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.