ஊரடங்கை நீட்டிப்பா? கலெக்டர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

 

ஊரடங்கை நீட்டிப்பா? கலெக்டர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நேற்று நடந்த பிரதமர் – மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கோரிக்கையே பிரதானமாக ஒலித்ததாக கூறப்படுகிறது.

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நேற்று நடந்த பிரதமர் – மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கோரிக்கையே பிரதானமாக ஒலித்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பது உறுதியாகிவிட்டது, எத்தனை நாட்களுக்கு என்பது இந்த வார இறுதியில் மோடி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

modi-meeting-with-cm

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 
முன்னதாக இன்று மத்திய அரசு அனுப்பிய சிறப்புக் குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அந்த குழுவினர் அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. மேலும் மே 3ம் தேதிக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆட்சித் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

edappadi-89

இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கை நீக்குவது, மற்ற மாவட்டங்களில் நீட்டிப்பது பற்றியும் ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.