ஊரடங்கை நீட்டிக்க முடிவு…  இன்று இரவு டி.வி-யில் அறிவிக்கிறார் மோடி? 

 

ஊரடங்கை நீட்டிக்க முடிவு…  இன்று இரவு டி.வி-யில் அறிவிக்கிறார் மோடி? 

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது என்று பிரதமர் மோடி நல்ல முடிவை எடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று இரவு மோடி டி.வி மூலம் நாட்டு மக்களிடம் இதை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது என்று பிரதமர் மோடி நல்ல முடிவை எடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று இரவு மோடி டி.வி மூலம் நாட்டு மக்களிடம் இதை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஒடிஷா, பஞ்சாப் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. தமிழகத்தில் ஊரடங்கை மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது. அரசு அமைத்த குழுவே குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்றது. இதே போல் ஒவ்வொரு மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லா மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக கோரிக்கைகவிடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதன் அடிப்படையில் மோடி முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. தமிழக முதல்வரும் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது.

modi-with-mask

இந்த நிலையில்  மோடி மேலும் சில வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்று நல்ல முடிவை எடுத்துள்ளார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மோடி நல்ல முடிவை எடுத்துள்ளார். ஊரடங்கை ஆரம்பநிலையிலேயே நாம் அறிவித்ததால் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நாம் நல்ல நிலையிலேயே உள்ளோம். ஊரடங்கை தற்போது தளர்த்தினால் நாம் தோற்றுப்போவோம். அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது ஊரடங்கை நீட்டிப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.
மோடி இன்று இரவு தொலைக்காட்சி வழியாக மக்களிடம் பேசி, ஊரடங்கை நீட்டிப்பது பற்றி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இன்று இல்லை என்றால், நாளை இரவாவது அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தேவையான திட்டங்களை அறிவித்துவிட்டு ஊரடங்கை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நீட்டித்துக்கொள்ளட்டும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.