ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் – முதலமைச்சர் பழனிசாமி

ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் – முதலமைச்சர் பழனிசாமி

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. 

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

edappadi palanisamy

விழித்திருங்கள் – விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை மக்கள் பின்பற்ற வேண்டும். பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது” எனக்கூறினார்.