ஊரடங்கை கடைபிடிக்காமல் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத்? – முதலமைச்சரே விதியை மீறியதாக சர்ச்சை

 

ஊரடங்கை கடைபிடிக்காமல் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத்? – முதலமைச்சரே விதியை மீறியதாக சர்ச்சை

பிரதமர் மோடியின் ஊரடங்கை கடைபிடிக்காமல் உத்தரபிரதேச முதல்வர் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

லக்னோ: பிரதமர் மோடியின் ஊரடங்கை கடைபிடிக்காமல் உத்தரபிரதேச முதல்வர் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை கண்காணிக்க அனைத்து மாநில முதல்வர்களும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்த ஊரடங்கு தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அம்மாநிலத்தில் மக்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார்.

ஆனால், ஊரடங்கை கடைபிடிக்காமல் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியாவில் உள்ள தற்காலிக ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையை வேறு இடத்திற்கு மாற்றும் பூஜை நிகழ்ச்சியில் சுமார் 20-க்கும் மேற்பட்டோருடன் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டிருக்கும் நிலையில் ஒரு மாநில முதல்வரே இவ்வாறு உத்தரவை மீறுவது சரியா? என சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அந்த புகைப்படங்கள் சிவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் எடுக்கப்பட்டவை என யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.