ஊரடங்கு விதிமீறல்: காவல்துறையினரின் அபராத வசூல் ரூ.1 கோடியை நெருங்கியது!

 

ஊரடங்கு விதிமீறல்: காவல்துறையினரின் அபராத வசூல் ரூ.1 கோடியை நெருங்கியது!

 

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்பதற்காகத்தான் இந்த ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரசின் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் வீட்டை வெளியே வந்து சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த சம்பவம் எல்லா மாநிலங்களில் நடக்கத்தான் செய்கிறது. 

போலீஸ்

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை காவல்துறை சார்பில் 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,18,533 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.