ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படாது!

 

ஊரடங்கு முடியும் வரை புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படாது!

ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் டாஸ்மாக் மதுக் கடைகள் ஊரடங்கிற்கு பிறகும் அதை திறக்காமல் அப்படியே மூடிவிடலாம் என தெரிவித்தனர்.

ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் டாஸ்மாக் மதுக் கடைகள் ஊரடங்கிற்கு பிறகும் அதை திறக்காமல் அப்படியே மூடிவிடலாம் என தெரிவித்தனர். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூபாய் 100 கோடிக்கும் மேலாகவும் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடிக்கும் மேலாக வருவாய் கிடைப்பதால் அதனை மூடவாய்ப்பில்லை என்றும் சொல்லப்பட்டது.

tasmac

இந்நிலையில் இன்று மாலை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை செயலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மதுக்கடைகள் திறப்பது, பெட்ரோல் மற்றும் மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிப்பது, அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை செய்யும் நேரத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என அமைச்சரவை கூட்டம் முடிவெடுக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் மே.17க்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.