ஊரடங்கு நேரத்தில் இளசுகளின் அரட்டை: 5 பேரை சுட்டுக்கொன்ற நபர்!

 

ஊரடங்கு நேரத்தில் இளசுகளின் அரட்டை: 5 பேரை சுட்டுக்கொன்ற நபர்!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

 கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

ttn

இதுவரை உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  

ttn
இந்நிலையில் ரஷ்யாவில் யாசான் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். அந்த வகையில் அப்பகுதியில்  வசிக்கும் 32 வயதுமதிக்கத்தக்க நபரின் வீட்டின் ஜன்னல் பக்கத்தில் நின்று இளம்வயது ஆண்களும், பெண்களும் சத்தமாக பேசி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து செல்லுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.ஆனாலும் அவர்கள் செல்வதாக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய கைத்துப்பாக்கியை கொண்டு வந்து அவர்களை சுட்டார். இதில் 4 ஆண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.