ஊரடங்கு நீட்டிப்பா?.. இன்று இரவு மோடி பேசுகிறார்! 

ஊரடங்கு நீட்டிப்பா?.. இன்று இரவு மோடி பேசுகிறார்! 

கொரோனா நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. உயிரிப்புக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
கொரோனா நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. உயிரிப்புக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில மாநிலங்கள் ஊரடங்கை இந்த மாத இறுதிவரை நீட்டிப்பு செய்தி உத்தரவிட்டு வருகின்றன. தமிழகத்திலோ ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு 10ம் வகுப்புத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

school-students

ஊரடங்கை நீட்டிப்பது, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நேற்று (மே 11) மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் பேசினார். இந்த கூட்டத்தில் சில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் சிலர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவி செய்தால் ஊரடங்கை நீட்டிக்கலாம், இல்லை என்றால் ஊரடங்கு வேண்டாம் என்று சிலர் கூறியதாகவும் தெரிகிறது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

modi-on-curfew

ஊரடங்கு வருகிற 17ம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பேச உள்ளார். அப்போது ஊரடங்கை நீட்டிப்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.