ஊரடங்கு சிகிச்சையால் பூமி மேம்படுகிறது: பிரபல இசையமைப்பாளரின் ட்வீட்!

ஊரடங்கு சிகிச்சையால் பூமி மேம்படுகிறது: பிரபல இசையமைப்பாளரின் ட்வீட்!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது.

ttn

அதேபோல் கொரோனா உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக உயர்ந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 765லிருந்து  857 ஆக உயர்ந்துள்ளது.  இதனால் கடந்த 20 நாட்களாக மக்கள் ஊரடங்கை பின்பற்றி வருகிறார்கள். 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்  தனது டிவிட்டர் பக்கத்தில், “ஊரடங்கு  3 வாரத்திற்கும் மேலாக அமலில் இருக்கிறது. குணமடைய வேண்டும் எனில் சிகிச்சையின் வலியைக் கடந்துச் செல்ல வேண்டும். இந்த சிகிச்சையால் பூமி மேம்படுகிறது. ஆனால் இதற்கு இன்னும் அவகாசம் தேவை.  தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.