ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!

 

ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தீவிரம் அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மே மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் வருமானமில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு உதவும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு சில அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திறக்கப்பட்டுள்ள  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

ttn

அதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் படி தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளது. அதே போல ஏ.டி.எம் -ல் ஒரு நபர் பயன்படுத்திய பிறகு, உடனே கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு கிருமி நாசினி தெளிக்காத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.