ஊரடங்கினால் 50% ஊதியத்தை பிடித்தம் செய்வதை எதிர்த்து செவிலியர்கள் போராட்டம்!?

 

ஊரடங்கினால் 50% ஊதியத்தை பிடித்தம் செய்வதை எதிர்த்து செவிலியர்கள் போராட்டம்!?

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என பலரும் களம்கண்டு பணிபுரிந்து வருகிறார்கள். 

நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியர்கள் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

tt

இதுவரை கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் 41லட்சத்து 68ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 2லட்சத்து 85ஆயிரத்து 445பேர் பலியாகி  உள்ளனர் . மேலும் 14லட்சத்து 52ஆயிரத்து 626 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,455 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என பலரும் களம்கண்டு பணிபுரிந்து வருகிறார்கள். 

tt

இந்நிலையில் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனை நுங்கம்பாக்கத்தில் ஆறு மாடி கட்டிடத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.  இங்கு பணிபுரிந்து வரும் செவிலியர்கள் ஊரடங்கினால் 50% ஊதியத்தை பிடித்தம் செய்வதை எதிர்த்து இன்று பிற்பகல் போராட்டம் நடத்தவுள்ளார்களாம்.  உலக செவிலியர் தினத்தன்று செவிலியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.