ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வாக்களிப்பு !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் வாக்களிப்பு !

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமாக  156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமாக  156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கப்பட்டு வருகிறது. 

ttn

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வெளியூரில் தங்கி பணிபுரியும் மக்களும், தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது மனைவி, மகன் மற்றும் மரு மகளுடன் சென்றார். அதன் பின்னர்,  எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.  

.