ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 18,570 பேர் போட்டியின்றி தேர்வு !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்..  18,570 பேர் போட்டியின்றி தேர்வு !

தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், பதற்றமான சூழல் நிலவும் வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள் பொருத்தி, அதனைச் சென்னை காவல் ஆணைய அலுவலகத்திற்கு நேரலையாகக் காட்டப்படுகிறது என்று தெரிவித்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, தேர்தல் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தபழனிசாமி ஆணையர் தெரிவித்தார். அதில், ” மொத்த மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 27, மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 515, மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 5,090 என்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2,31,890,  போட்டியின்றி  18,570  தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கையையும், மண்டல குழுக்களின் எண்ணிக்கையையும், முதல் கட்ட தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர் என்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்களிக்க உள்ளனர் என்றும் தெரிவித்தார்.  

ttn

மேலும், பதற்றமான சூழல்  நிலவுவது என்று 8633 வாக்குச்சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 8633 சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டும்,  2842 சாவடிகளில் வீடியோ கவரேஜூம் செய்யப்பட்டும்  வருகிறது என்றும் தேர்தல் பணியில் 60,918 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் 495 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.