ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் டிச. 31ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும்  என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் டிச. 31ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும்  என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27, 28 ஆகிய ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 

மறுவாக்குப்பதிவு

இந்நிலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு காரணங்களுக்காக மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதாவது வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வாக்குப்பெட்டியை கைப்பற்றுதல் போன்ற காரணங்களால் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.