ஊதா கலரு ஐஸு….ஆபத்தை ஐஸ் கட்டியாக வாங்கித்தான் ஆகணுமா!?

 

ஊதா கலரு ஐஸு….ஆபத்தை ஐஸ் கட்டியாக வாங்கித்தான் ஆகணுமா!?

மண்டை காய்கிற வெய்யிலுக்கு ‘ஜில்’லென்று ஏதாவது குடித்தால் நல்லா இருக்கும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும்.

மண்டை காய்கிற வெய்யிலுக்கு ‘ஜில்’லென்று ஏதாவது குடித்தால் நல்லா இருக்கும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும்.அதற்காக ஜூஸ் கடைக்குப் போனதும் பிரதர் ஐஸைக் கொஞ்சம் ஜாஸ்தியா போட்டு ஒரு வாட்டர் மெலனோ அல்லது வேற ஏதோ ஒரு  ஜூஸ் குடுங்க என்று கேட்டு வாங்கி குடிக்கிறீங்க. அடிக்கிற வெய்யிலில் சொர்க்கமே பக்கத்தில் வந்தமாதிரி இருக்கும்.

ஐஸ் எப்படிப்பட்டது

ice

இந்த மாதிரி ஜூஸ் சாப்பிடும் போது,அதில் சேர்க்கப்படும் ஐஸ் எப்படிப்பட்டது என்று எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா!? பளிச்சென்று வெள்ளையாக க்யூப் வடிவில் சில கடைகளில் ஐஸ் இருக்கும்.சில இடங்களில் பெரிய கட்டியாக கொஞ்சம் மங்கலான நிறத்தில் இருக்கும்.இதுதான் உங்கள் வாழ்க்கையோடு விளையாடும் எமன்.

ஐஸ் கட்டிகள் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கவே தயாரிக்கப்படுகிறது

ice

பொதுவாக ஐஸ் கட்டிகள் மீன்களை பதப்படுத்தவும்,இறந்தவர்களின் உடலை பாதுகாக்கவே தயாரிக்கப்படுகிறது.அது சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டிய அவசியமில்லை.சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் தயாரிக்கும் போது செலவு கூடுதலாக இருக்கும்.சில கடைகளில் பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை என்று தரமான ஐஸ்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.அதுதான் க்யூப் வடிவில் இருக்கும் ஐஸ்.

ஐஸ்களின் தரம்

ice

இதுபோல் தயாரிக்கப்படும் ஐஸ்களின் தரம் பார்க்கும் போதே தெரிய வேண்டும் என்பதற்குத்தான் மத்திய அரசு ஒரு உத்தரவை போட்டிருக்கிறது.நுகர்வோர் பயன்பாட்டுக்கு தயாரிக்கப்படும் ஐஸ் இயற்கையான வெள்ளை நிறத்திலும், இறந்தவர்களின் உடலை பதப்படுத்தும் ஐஸ் ஊதா நிறத்திலும் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் உண்டு.

சொந்த காசில் எதுக்கு நாம சூனியம் வச்சுக்கணும்!

ice

நீங்கள் எங்காவது ஊதா நிறத்தில் ஐஸ் கட்டியைப் பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பே இல்லை! பணத்தாசை பிடித்த சிலர் மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கண்டும் காணாமலும் இருக்கிறார்கள்.பொதுவாக தண்ணீர் மூலம்தான் நோய்க்கிருமிகள் பரவும்.சொந்த காசில் எதுக்கு நாம சூனியம் வச்சுக்கணும்! இனிமேல் ஜூஸ் ஆர்டர் பண்ணும்போது கவனமாக இருங்கள்.ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்.

இதையும் வாசிக்க:  கை,கால் நல்ல தானே இருக்கு: விஜய் பட நடிகையை விளாசிய பிரபல நடிகர்!