ஊட்டி சாலையை சீரமைக்க தி.மு.க கொடுத்த ரூ.10 கோடியைக் கூட பயன்படுத்தவில்லை… எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

 

ஊட்டி சாலையை சீரமைக்க தி.மு.க கொடுத்த ரூ.10 கோடியைக் கூட பயன்படுத்தவில்லை… எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க தி.மு.க கொடுத்த நிதியைக் கூட மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தாமல் உள்ளது என்று எம்.எல்.ஏ திராவிடமணி கூறியுள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் கன மழை பெய்தது. இதனால், சாலைகள் சேதம் அடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க தி.மு.க கொடுத்த நிதியைக் கூட மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தாமல் உள்ளது என்று எம்.எல்.ஏ திராவிடமணி கூறியுள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் கன மழை பெய்தது. இதனால், சாலைகள் சேதம் அடைந்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து பார்வையிட்டார்.

dmk

அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்தார். முதல்வர் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் சென்று பார்வையிடவில்லை. கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரியை சீரமைக்க தி.மு.க தரப்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டது.
மழை முடிந்து மூன்று மாதங்கள் முடியப் போகிறது. அடுத்து சீசன் இன்னும் ஒரு சில மாதங்களில் ஆரம்பிக்க உள்ளது. இதற்குள்ளாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

nilagiri

ஆனால், கன மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் கூட சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில், தி.மு.க. அளித்த நிதியைக் கூட மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை என்று கூடலூர் எம்.எல்.ஏ திராவிட மணி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நீலகிரியில் கன மழை காரணமாக ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. அதைச் சரி செய்யத் தமிழக அரசு வெறும் ரூ.78 கோடியை ஒதுக்கியது. தி.மு.க தரப்பில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடி, மற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெற்ற ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியைக் கூட மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தவில்லை. 
சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், விரைவில் தி.மு.க தரப்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.