ஊடகங்களுக்கு டி.ஐ.ஜி எச்சரிக்கை!

 

ஊடகங்களுக்கு டி.ஐ.ஜி எச்சரிக்கை!

டிஐஜி பாலகிருஷ்ணன் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிஐஜி பாலகிருஷ்ணன் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்பெல்லாம் ஊடகங்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ, அந்த பெண்ணின் தாய், தந்தையரின் பெயரையோ வெளியிட மாட்டார்கள். பெண்ணின் பெயருக்குப் பதிலாக வேறு ஒரு பெயரைக் குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று பதிவு செய்வார்கள். ஆனால் இன்று பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் புகைப்படம் மற்றும் விபரங்களை வெளியிட்டு கொச்சைப்படுத்துகின்றன.

அண்மையில் திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தில் ஊடகங்கள், பெண்ணைப் பற்றிய தகவல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளியிட்டு அந்த பெண்ணை அடையாளப் படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டிருந்தன. இதனை சுட்டிக்காட்டி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார் 

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டம் 220-ஏ (1)ன்படி குற்றமாகும். மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ள  டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.