உ.பி-யில் 2 ஆண்டுகளில் 103 என்கவுண்டர்! – மாயாவதிக்கு பதிலடி கொடுத்த போலீஸ்

 

உ.பி-யில் 2 ஆண்டுகளில் 103 என்கவுண்டர்! – மாயாவதிக்கு பதிலடி கொடுத்த போலீஸ்

உ.பி-யில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 103 பேர் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி-யில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 103 பேர் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படும் நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி இது குறித்து பேசும்போது, ஐதராபாத் போலீசைப் பார்த்து உ.பி போலீஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கூறியிருந்தார். இதற்கு உ.பி போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.

mayawati

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் 103 கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உ.பி போலீசாரின் கடுமையான நடவடிக்கையைக் கண்டு 17,745 கிரிமினல்கள் தங்கள் ஜாமீனை சரண்டர் செய்துவிட்டு சிறைக்கே திரும்பிவிட்டனர். காட்டாட்சி என்பது முன்பு இருந்தது. ஆனால் இப்போது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

police

என்கவுண்டர் சிலருக்கு சரி என்று தோன்றலாம்… சிலருக்கு அது தவறாகத் தெரியலாம். இந்த இரண்டில் எது சரி, தவறு என்று கூறவில்லை. ஆனால், என்கவுண்டர் செய்யப்படும் அனைவருமே குற்றவாளிகள்தானா என்ற சந்தேகம் மட்டுமே எழுப்புகிறோம். போலீஸ் ஒருவர் மீது குற்றம்சாட்டினாலே அவர் குற்றவாளி என்று முடிவுக்கு வருவது எந்த அளவுக்கு ஆபத்தில் போய் முடியுமோ என்று பல தலைவர்களும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். அப்படிப் பார்த்தால் யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று என்கவுண்டர் செய்துவிட முடியும் என்றும் எச்சரிக்கின்றனர்.