உ.பி-யில் குளிர் காரணமாக பசுக்கள் மரணம்… அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு!

 

உ.பி-யில் குளிர் காரணமாக பசுக்கள் மரணம்… அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்பூர் நகரில் பசுக்களை குளிரிலிருந்து காப்பாற்றப் புதிதாகக் காப்பகம் கட்டப்பட்டது. அதில் அடைக்கப்பட்ட சில பசுக்கள் குளிர் தாக்கம் காரணமாக உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி செயல் அலுவலர் வி.எம்.திரிபாதி மற்றும் ஊராட்சி இளம் பொறியாளர் மூல்சந்த் மீது பணியை ஒழுங்காகச் செய்யவில்லை என்று கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் குளிர் காரணமாக பசுக்கள் இறந்தது தொடர்பாக அதிகாரிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்பூர் நகரில் பசுக்களை குளிரிலிருந்து காப்பாற்றப் புதிதாகக் காப்பகம் கட்டப்பட்டது. அதில் அடைக்கப்பட்ட சில பசுக்கள் குளிர் தாக்கம் காரணமாக உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி செயல் அலுவலர் வி.எம்.திரிபாதி மற்றும் ஊராட்சி இளம் பொறியாளர் மூல்சந்த் மீது பணியை ஒழுங்காகச் செய்யவில்லை என்று கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இவர்கள் மீது நியூ மான்டி போலீஸ் நிலையத்தில் விலங்குகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

cow-98

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உ.பி-யில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. ஆனால், இது பற்றிய முழு விவரத்தை மாநில காவல்துறை வெளியிட மறுத்துவருகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டார்கள், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்று கூறி இஸ்லாமியர் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை அபராதமாக எடுத்துச் செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இது பற்றி எல்லாம் கவலைப்படாத மாநில அரசு, மாடுகள் இறந்த விவகாரத்தில் இவ்வளவு விரைவாக செயல்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.