உ.பி சட்டசபையில் 100 பிஜேபி எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம்

 

உ.பி சட்டசபையில் 100 பிஜேபி எம்.எல்.ஏக்கள்  அரசுக்கு எதிராகப் போராட்டம்

பிஜேபியால் இந்தியா அமைதி இழந்துவிட்டது. அரசுக்கு எதிராக தினமொரு போராட்டம் நடக்கிறது என்பதுதான் இன்றைய நிலை.இதில் பிஜேபி ஆளும் உத்திரப்பிரதேச சட்டசபையில் அந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே தர்னா நடத்தி யோகி ஆதித்யநாத்தை கலங்கடித்து இருக்கிறார்கள்.

பிஜேபியால் இந்தியா அமைதி இழந்துவிட்டது. அரசுக்கு எதிராக தினமொரு போராட்டம் நடக்கிறது என்பதுதான் இன்றைய நிலை.இதில் பிஜேபி ஆளும் உத்திரப்பிரதேச சட்டசபையில் அந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே தர்னா நடத்தி யோகி ஆதித்யநாத்தை கலங்கடித்து இருக்கிறார்கள்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இத்தனைக்கும் காரணம் லோனி தொகுதி பிஜேபி எம்.எ.ஏவான நந்த் கிஷோர் குஜ்ஜார்.ஆசாமி நம்ம செல்லூர் ராஜு,ராஜேந்திர பாலாஜி ரகம்.அவ்வப்போது தவறான காரணங்களுக்காக செய்தித்தாள்களில் அடிபட்டுக்கொண்டே இருக்கும்.போலீஸ்காரரை தாக்கிய குஜ்ஜார் உதவியாளர் கைது.குஜ்ஜாரின் மைனர் மகன் கார் மோதி ஒருவர் படுகாயம்,உணவுப் பாதுகாப்பு ஆய்வாளரை தாக்கினார் குஜ்ஜார்,என்று.இவர் சட்டசபையிலும் என்னை போலீஸ் மிரட்டுகிறது என்று கோசமெல்லாம் போட்டவர்.

 

இந்த நிலையில், நேற்று குஜ்ஜார் எழுந்து தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்புக் கேட்டார், கிடைக்கவில்லை. பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கண்ணா அதட்ட, சபாநாயகர் ஹிர்த்தி நாராயண் தீக்‌ஷித் பேச அனுமதி தரமுடியாது, வேண்டுமானால் என் அறையில் வந்து உங்கள் குறைகளைச் சொல்லுங்கள் என்றார்.இதை பயன்படுத்திக்கொண்ட எதிர்கட்சித் தலைவரான சமாஜ்வாடியின் ராம் கோபிந்த் சவுத்ரி உறுப்பினரை பேச அனுமதியுங்கள். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்று குரல் கொடுக்க உற்சாகமான குஜ்ஜார் தர்னாவில் அமர்ந்தார்.

அவருக்கு ஆதரவாக எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் குரல் கொடுக்க ஆளும் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் 100 பேர் குஜ்ஜாருக்கு ஆதரவாகத் திரண்டு தங்கள் கட்சித் தலைமைக்கு எதிராக கோஷம் போட்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே கிழக்கு உ.பியில் கலவரங்கள் நடந்து கொண்டு இருக்கையில் கட்சிக்குள்ளேயே கலவரமா,என உத்திரப்பிரதேச முதல்வரை யோகி ஆதித்யநாத்தை கதிகலங்க வைத்திருக்கிறார் குஜ்ஜார்.இத்தனைக்கும் இவர் ‘ உங்களை ஒழித்துக்கட்ட கட்சிக்குள்ளேயே சதி நடக்குது உஷார்’ என்று யோகிக்கு ரகசியமாக கடிதம் எழுதும் அளவுக்கு அவருடைய ஆதரவாளராக இருந்தவர்தான்.