உள்ளூர்காரங்களை விடமா வெளியூர்காரங்களை விடுறீங்க! இது ஜனநாயகத்துக்கு அவமானம்! டிவிட்டரில் பொங்கும் காங்கிரஸ்

 

உள்ளூர்காரங்களை விடமா வெளியூர்காரங்களை விடுறீங்க! இது ஜனநாயகத்துக்கு அவமானம்! டிவிட்டரில் பொங்கும் காங்கிரஸ்

உள்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டு, வெளிநாட்டு தலைவர்களை மட்டும் காஷ்மீருக்கு செல்ல அனுமதிப்பது ஜனநாயகத்துக்கு அவமானம் என காங்கிரஸ் தலைவர்கள் டிவிட்டரில் பொங்கியுள்ளனர்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உலக அமைப்புகளில் இந்தியா மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் கொண்ட குழு காஷ்மீருக்கு நேரடியாக சென்று உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காஷ்மீருக்கு நேரடியாக சென்று உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள உள்ளனர்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை காஷ்மீருக்கு செல்ல அனுமதி அளித்து இருப்பதை காங்கிரஸ் பிரச்னையாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் இது குறித்து டிவிட்டரில், நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான விவாதத்தின் போது, அனைத்து கட்சி அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு காஷ்மீர் சென்று நிலவரத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அந்த கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளபடவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அரசின் விருந்தாளியாக செல்ல முடியுமா? என்ன இது, ஜனநாயகத்துக்கு அவமானம் என பதிவு செய்து இருந்தார்.

ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரசின் மற்றொரு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், காஷ்மீர் மக்களை சந்திப்பதற்கு இந்திய தலைவர்கள் தடுக்கப்படும் வேளையில், ஜம்மு அண்டு காஷ்மீரை பார்வையிட ஐரோப்பிய தலைவர்களுக்கு தேசியவாத மார்பு துடிக்கும் சாம்பியன் அனுமதி அளித்து இருப்பது, இந்திய ஜனநாயகத்துக்கும், சொந்த நாடாளுமன்றத்துக்கும் ஒரு அவமானம் என பதிவு செய்து இருந்தார்.

மனிஷ் திவாரி

காஷ்மீர் செல்ல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை காங்கிரசின் மூத்த தலைவர் மனிஷ் திவாரி கிண்டல் செய்துள்ளார். அவர் டிவிட்டரில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் ஜம்மு அண்டு காஷ்மீர் சென்று பார்வையிட முடிந்திருக்கும் என நக்கல் அடித்து பதிவு செய்து இருந்தார்.