உள்ளூரில் ப்யூஸ் போன அமைச்சர் தங்கமணி… மூடி மறைத்த அதிகாரிகள்..!

 

உள்ளூரில் ப்யூஸ் போன அமைச்சர் தங்கமணி… மூடி மறைத்த அதிகாரிகள்..!

அதிமுக தனது 47 ஆண்டுகால வரலாற்றில் இப்போது தான், மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து, சமீபத்தில் அமைச்சர் தங்கமணி  போட்ட ரகசிய கூட்டம் அதிகாரிகளை அதிர வைத்து விட்டது. அங்கு அதிமுக தனது 47 ஆண்டுகால வரலாற்றில் இப்போது தான், மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. thangamani

வாக்குகளும் 19 சதவீதம் மட்டுமே கிடைத்திருக்கிறது. அதிலும் எனது சொந்த ஊரில் குறைந்த அளவே ஓட்டு விழுந்திருக்கிறது. ’பாளையத்தை வருவாய் கோட்ட தலைநகராக்கினேன். அனைத்து அரசு அலுவலகங்களையும் கொண்டு வந்தேன். கல்லூரி கொண்டு வந்தேன். வாக்காளர்களையும் பணத்தில் நனைய விட்டேன். ஆனாலும் இப்படி மோசமான தோல்வி ஏன்?’ என்று கேட்டு சூடாகி விட்டார்.ops

 உடனடியாக இதற்கு காரணம் என்ன என கண்டுபிடிக்க  வருவாய், போலீஸ் மற்றும் உளவுத்துறையினரை ஏவிவிட்டிருக்கிறார். இரவு, பகல் என்று பாராமல் நடக்கும் சரக்கு விற்பனை. அமோகமாக விற்கும் லாட்டரி சீட்டு, ஆகியவற்றால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது தான் காரணம் என்று சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.thangamani
 
அதே நேரத்தில் மாவட்டத்தில் வீட்டுமனை வரன்முறை என்று எளிய  மக்களை, வாங்கிய விலைக்கு மேல் அதிக கட்டணம் கட்டச் சொன்னது. தாசில்தார் ஆபீஸ் நகராட்சி, யூனியன் ஆபீஸ், இ-சேவைமையம் என்று சுற்றலில் விட்டது. அது சரியில்லை, இது சரியில்லை என்று அலைக்கழித்து லம்பாக கல்லா கட்டியது. இதனால் வயிறு எரிந்து கொந்தளித்த கட்சி சாராத 30 சதவீத மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக திரும்பியது போன்ற விஷயங்களை அமைச்சரிடம் அவர்கள் கொண்டு செல்லவே இல்லை.