உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி பதவிகளை கேட்டும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக, அதிமுக..!

 

உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி பதவிகளை கேட்டும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக, அதிமுக..!

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது. தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் இந்த மாத இறுதிக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதால் இரண்டு கட்சிகளுமே, உள்ளாட்சித் தேர்தல் குறித்தே அக்கூட்டங்களில் ஆலோசனை மேற்கொள்ளும்.

admk and dmk

இந்நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க உள்ளாட்சித் தேர்தலில் 2 மேயர் இடங்கள் மற்றும் 20% இடங்களைக் கேட்க உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

admk and dmk

அதே போல், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அனைத்து கட்சிகளும் பெரும்பாலான முக்கிய இடங்களைக் கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதே சூழல் தான் திமுக கட்சியிலும் நிலவி வருகிறது. இதனால், இந்த இரண்டு கட்சிகளும் தலைமைகளும் பெரும் குழப்பத்தில் உள்ளன. மேலும், அதிமுக மற்றும் திமுக தங்களது கட்சிக்குள் மறைமுக பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.