உள்ளாட்சி தலைவர் பதவிகள் ஏலம் மூலம் தேர்ந்தெடுத்தால் செல்லாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

உள்ளாட்சி தலைவர் பதவிகள் ஏலம் மூலம் தேர்ந்தெடுத்தால் செல்லாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ

சில கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுகின்றன. அதனை ஏலம் எடுப்பவர்களை எதிர்த்துத் தேர்தலில் யாரும் போட்டியிட மாட்டார்களாம்.

கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது.

ttn

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றோடு நிறைவடைந்து, நாளை வேட்புமனுத் தாக்கலுக்கான பரிசீலனை தொடங்கவுள்ளது. இதனிடையே, சில கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுகின்றன. அதனை ஏலம் எடுப்பவர்களை எதிர்த்துத் தேர்தலில் யாரும் போட்டியிட மாட்டார்களாம். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவதைக் கண்காணிக்கவும், தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லாது என்று தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணி காட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.