உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

 

உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

 மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள  158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  

ttn

கடந்த 27 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தற்போது  27 மாவட்டங்களிலுள்ள 46ஆயிரத்து 639 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு  வாக்குப்பதிவு நடக்கிறது. 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2ஆயிரத்து 544 ஒன்றிய வார்டு உறுப்பினர், 4ஆயிரத்து 924 ஊராட்சி தலைவர், 38ஆயிரத்து 916 வார்டு உறுப்பினர் பதவிகள் இதில் அடங்கும். காலை 7 மணிக்கு  தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.  மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.

ttn

 சுமார்  25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வாக்காளர் ஒருவர் மொத்தம் நான்கு பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.வாக்குச்சாவடிகள் வெப் கேமரா வைத்து கண்காணிக்கப்படுவதுடன், வாக்குப்பதிவானது வீடியோவாக எடுக்கப்படும்.இந்த இரண்டு கட்ட தேர்தல் முடிவுகளும் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.