உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு பொது சின்னம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு பொது சின்னம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பொது சின்னம் கிடைத்தால் தான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி டிடிவி தினகரன் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிடவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சி இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு கட்சியும்,  டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கட்சியும் செயல்படத் தொடங்கின. அதன் பின்னர் தினகரன், அதிமுகவையும் அதன் சின்னத்தையும் மீட்டெடுக்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறைக்குச் சென்றதால் தினகரன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

TTN

அமமுக கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முயற்சியை மேற்கொண்டார். அதன் படி, இந்த கட்சியைப் பதிவு செய்வதற்கு எந்தவித ஆட்சேபனை  இருந்தால் தெரிவிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிராகப் பல மனுக்கள் குவிந்தன. அதற்கெல்லாம் உரிய விளக்கம் அளித்து சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டது. 

TTN

அமமுக கட்சிக்கு பொது சின்னம் கிடைத்தால் தான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி டிடிவி தினகரன் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிடவில்லை. இந்நிலையில், வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு பொது சின்னம் வழங்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.