உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டி ! சசிகலா அதிமுகவில் இணைய மாட்டார் ! தினகரன் அதிரடி !

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டி ! சசிகலா அதிமுகவில் இணைய மாட்டார் ! தினகரன் அதிரடி !

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் இணைவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

sasikala and dinakaran

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேட்டி அளித்த தினகரன், “சசிகலா சிறையிலிருந்து வந்ததும் அதிமுகவில் இணையமாட்டார்” எனத்  திட்டவிட்டமாக தெரிவித்தார். தற்போதைய இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடா விட்டாலும், உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயம் போட்டியிடும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களில் ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் கடலில் கலந்துவிட்டன என குற்றம்சாட்டினார் டிடிவி தினகரன்.
இதற்கிடையே சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுவிக்க முயற்சி மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், நன்னடத்தை விதிமுறைகள் என்பது கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டும்தான் என்றும் சசிகலா இந்த விதி அடிப்படையில் முன்கூட்டியே விடுதலையடைய வாய்ப்பில்லை என்று கர்நாடக சிறைத்துறை இயக்குநர் என்.எஸ்.மெகரிக் தெரிவித்துள்ளார். 
எனவே சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்த பிறகே சிறையில் இருந்த சசிகலா வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.