உள்ளாட்சித் தேர்தலின் புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியீடு !

 

உள்ளாட்சித் தேர்தலின் புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியீடு !

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும் நகர்ப்புற தேர்தலின் அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்திருந்தார். தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

ttn

இதனையடுத்து, சமீபத்தில் வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிய உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எப்போது வெளியிடுவது என்பது குறித்து தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, இன்று மாலை 4:30 மணிக்கு உள்ளாட்சி தேர்தலின் தேதி மற்றும் விவரங்கள் குறித்த அனைத்து விவரங்களும் வெளியாக உள்ளன.