உள்நோயாளிகளை கருத்தில் கொண்டு திருச்சியில் இன்று ரத்ததான முகாம்!

 

உள்நோயாளிகளை கருத்தில் கொண்டு திருச்சியில் இன்று ரத்ததான முகாம்!

உள்நோயாளிகளை கருத்தில் கொண்டு, இன்று ரத்த தான முகாம் நடைபெற  உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

கொரோனாவில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு /வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை நடந்து வருவதால் உள்நோயாளிகளை கவனிக்க முடியாமல் போகிறது. அதனால் உள்நோயாளிகளை கருத்தில் கொண்டு, இன்று ரத்த தான முகாம் நடைபெற  உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

ttn

தொடர்ந்து, மக்கள் வெளியே வராததின் காரணமாக ரத்த தானம் குறைந்துள்ளதால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் மற்றும் மற்ற சிகிச்சை பெறுபவர்களுக்காக ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற உள்ளது என்றும் தன்னார்வலர்கள் வந்து ரத்தம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ரத்த தான முகாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதை பின்பற்றி நடைபெறும் என்றும் இந்த முகாமை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள 9443182847, 9941021399 , 9965519761 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.