உள்நாட்டில் விற்பனை குறைந்தாலும், லாபம் மட்டும் குறையவில்லை…. ரூ.1,262 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

 

உள்நாட்டில் விற்பனை குறைந்தாலும், லாபம் மட்டும் குறையவில்லை…. ரூ.1,262 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,262 கோடி ஈட்டியுள்ளது.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒரு முறை தங்களது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான தனது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

பஜாஜ் வாகன ஆலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் (2019 அக்டோபர்) லாபமாக ரூ.1,262 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் (2018 அக்டோபர்-டிசம்பர்) காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை குறைந்தபோதும், ஏற்றுமதி அதிகரித்ததால் அந்நிறுவனத்தின் லாபம்  அதிகரித்துள்ளது.

பஜாஜ் மோட்டார் சைக்கிள்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் 5.62 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும். இருப்பினும் அந்த காலாண்டில பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக மோட்டார் சைக்கிள் விற்பனை 5 சதவீதம் சரிவடைந்துள்ளது.