உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளில் இந்திய வீரர்கள் தோல்வியுற்றது பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மல்யுத்த வீரர்கள் காண உலக சாம்பியன்ஷிப் தொடர் தற்போது கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது இதில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில், இந்திய வீரர் குர்பிரீட் சிங் 77 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். இவர் செர்பிய நாட்டைச் சேர்ந்த விக்டோர் நிம்சை எதிர்கொண்டார்.

wresting

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செர்பிய வீரர் குர்ப்ரீட் சிங்கை எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். குர்பிரீட் சிங் பதக்கம் பெறாமல் வெளியேறியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனையடுத்து 60 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய இந்திய வீரர் மனிஷ் இரண்டாம் சுற்றில் மால்டோவா வீரரான விக்டர் சிபானுவை எதிர்கொண்டார். இதில் மனிஷ் துவக்கத்தில் சற்று நிதானமாக ஆடினாலும் இடையில் சிறு சிறு தவறுகள் செய்ததால் தோல்வியை சந்தித்து வெளியேற நேரிட்டது.

130 கிலோ எடைப் பிரிவில் தகுதிச்சுற்றில் கலந்து கொண்ட இந்திய வீரர் நவீன், பான் அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்கர் பினொவை எதிர்கொண்டார். இதில் இந்திய வீரரான நவீன் ஆஸ்கரை சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியதால், மூன்று பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் ஏதும் பெறாமல் வெளியேறியது ஏமாற்றம் அளித்தது.