உலக போர்களை விட மோசமான வைரஸ்!கொரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு – பிரதமர் மோடி 

 

உலக போர்களை விட மோசமான வைரஸ்!கொரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு – பிரதமர் மோடி 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9000 நெருங்கியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் மேலும் ஒருவர் பலியானதையடுத்து, மொத்த உயிரிழப்பு நான்காக உயர்ந்துள்ளது. 

PM Modi

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த  2 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். கொரோனா வைரஸ் உலகப் போர் போல உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மிக மன தைரியத்துடன் வைரஸ் தாக்குதலை எதிர்க்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. வரும் சில வாரங்கள் அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .

ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும்.கொரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு.
கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தோ அல்லது முன் கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை. வைரஸ் பரவுவதை தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்த அளவுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகாதீர்கள். நோய் தொற்றை யாருக்கும் பர்ப்பாதீர்கள். ” எனக்கூறினார்