உலக படவிழாவில் முதல் விருதை தட்டிய நெடுநெல்வாடை..நெகிழ்ந்த இயக்குனர்!

 

உலக படவிழாவில் முதல் விருதை தட்டிய நெடுநெல்வாடை..நெகிழ்ந்த இயக்குனர்!

இது குறித்து பேசிய இயக்குனர் செல்வ கண்ணன்,”ரொம்ப சந்தோசமா இருக்கு!உலக  நாடுகளில் இருந்து எவ்வளவோ படங்கள் இந்த விழாவில் பங்கு பெற்றிருக்கிறது.

சிறு முதலீட்டுப் படங்கள் வரிசையில் சமீபத்தில் வெளிவந்த படங்களில் அதிக கவனம் ஈர்த்த படங்களில் ‘நெடுநல்வாடை’ படமும் ஒன்று.

பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல்  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் இது.

nedunelvadai

26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட Innovatie Film Acadamy ( IFA)  சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் நெடுநல்வாடை பங்கேற்றது.படம் பார்த்து பலரும் பாராட்டிய நிலையில்,விருதும் கிடைத்திருக்கிறது.

இது குறித்து பேசிய இயக்குனர் செல்வ கண்ணன்,”ரொம்ப சந்தோசமா இருக்கு!உலக  நாடுகளில் இருந்து எவ்வளவோ படங்கள் இந்த விழாவில் பங்கு பெற்றிருக்கிறது.பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள்,சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு  ரொம்ப பெருமையா இருக்கு.

எங்களை அங்கீகரித்த  Innovatie Film Acadamy க்கு ரொம்ப நன்றி.எங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி”.என்று நெகிழ்கிறார்.nedunelvadai

கன்னடம் தொடங்கி பல  மொழிகளிலும் CROWD FUNDING மூலம் படம் தயாரிக்கும் முயற்சிகள் நிறைய முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.தமிழில் நெடுநெல்வாடைதான் முதல் படம்.”இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள்,படத்தில் நடித்த நடிகர்,  நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறே”என்று படத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் மறக்காமல் நன்றி தெரிவித்தார் இயக்குனர்.சிறப்பா வருவீங்க ப்ரோ!